ஆலு மேத்தி கிரேவி (Aloo Methi Gravy)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து நறுக்கியது)
வெந்தயக்கீரை (Methi) - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது அல்லது பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியா தூள்) - 1.5 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெந்தயக்கீரையைச்சேர்த்து அதன் வாசனை போகும் வரை லேசாக வதக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளிக்கவும். பின்பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாகவதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து, எண்ணெய் பிரியும் வரைவதக்க வேண்டும்.அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து சில
வினாடிகள் கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மசாலாவின் பச்சைவாசனை போனதும், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வதக்கி வைத்துள்ளவெந்தயக்கீரையைச் சேர்க்கவும்.கரம் மசாலா தூவி, மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.சுவையான ஆலு மேத்தி கிரேவி தயார்.
0
Leave a Reply