குடைமிளகாய் கிரேவி (Capsicum Gravy)
தேவையான பொருட்கள்:
குடமிளகாய் - 2 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது அல்லது அரைத்தது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் (தனியா தூள்) - 1.5 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மல்லி தழை – சிறிதளவு
அரைக்க வேண்டியவை (விருப்பப்பட்டால்)
தேங்காய் - 2 மேசைக் கரண்டி
முந்திரி - 4 முதல் 5 (கிரேவி கெட்டியாக இருக்க)
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளிக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.நறுக்கிய தக்காளி அல்லது தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.நறுக்கி வைத்துள்ள குடமிளகாய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.தேங்காய் மற்றும் முந்திரி விழுதைச் சேர்த்து (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி)மிதமான தீயில் கொதிக்க விடவும்.கடைசியாக கரம் மசாலா மற்றும் மல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான குடமிளகாய் கிரேவி தயார்.
0
Leave a Reply