பன்னீர் காளான் (Paneer Mushroom) கிரேவி
தேவையான பொருட்கள்
பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக நறுக்கியது)
காளான் - 200 கிராம் (சுத்தம் செய்து நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது அல்லது விழுது)
தக்காளி - 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 8 முதல் 10 (சூடான நீரில் ஊறவைத்து அரைத்தது)
எண்ணெய் அல்லது நெய் - 3 மேஜைக்கரண்டி
பிரியாணி இலை, கிராம்பு, பட்டை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
மல்லித்தூள் (தனியா தூள்) - 1.5 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக் கீரை) - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை :
கடாயில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, நறுக்கிய காளான்களை சேர்த்து வதக்கி
தனியாக எடுத்துக் கொள்ளவும்.விருப்பப்பட்டால் பன்னீர் துண்டுகளையும் லேசாக வதக்கி வெதுவெதுப்பான நீரில் போட்டு
எடுக்கலாம் (இது பன்னீரை மென்மையாக மாற்றும்).அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளிக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்குவதக்கவும்தக்காளி கலவை வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாசேர்த்து நன்றாகக் கிளறவும்.அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2நிமிடங்கள் வதக்கவும்.
மசாலாக்களில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துகிரேவி பதத்திற்குக் கொதிக்க விடவும்.கிரேவி சற்று கொதித்ததும் வதக்கி வைத்துள்ள காளான் மற்றும் பன்னீர் துண்டுகளைச்சேர்க்கவும்.மிதமான தீயில் 5 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும்.இறுதியாக கசூரி மேத்தியை கைகளில் கசக்கி தூவி, மல்லித்தழை சேர்த்து அடுப்பை
அணைக்கவும். சுவையான பன்னீர் காளான் கிரேவி தயார்.
0
Leave a Reply