புதிய சட்டம் இனிமேல் சிம்கார்டு வாங்கனும்ன்னா, பயோமெட்ரிக் அவசியம்.
இந்தியாவில் அதிகரித்து வரும்'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகளை கட்டுப்படுத்த, சிம் கார்டு பெறுவதில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் சந்தேகத்திற்கிடமான வங்கி பரிவர்த்தனைகளை தற்காலிகமாக முடக்குவது உள்ளிட்ட அதிரடித் திட்டங்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.காவல்துறை அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்து, பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் இந்த மோசடிகளை தடுக்க பலமுனை உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக, சிம் கார்டுகளை வழங்கும் போது பயோமெட்ரிக் அடையாள சோதனையை கட்டாயமாக்கவும், மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளை உடனடியாக முடக்கவும் தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் மோசடி அழைப்புகளை கண்டறியும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், நீக்கப்பட்ட கணக்குகளின் தரவுகளை180 நாட்கள் வரை சேமித்து வைக்கவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.வங்கி துறையை பொறுத்தவரை, சைபர் மோசடிகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தற்காலிகத்தடை விதிக்கும் ரிசர்வ் வங்கியின் நடைமுறையை நாடு முழுவதும் சீராக அமல்படுத்த கோரப்பட்டுள்ளது.
2024,ஆம் ஆண்டில் அரசு அதிகாரிகள் முதல் முதியவர்கள் வரை பலரையும் பாதித்துள்ள இந்த'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடிகளை குறைக்க தொழில்நுட்பதளம், வங்கி மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்பட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
0
Leave a Reply