25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ராஜ்மா கிரேவி ( rajma gravy )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜ்மா கிரேவி ( rajma gravy )

தேவையான பொருட்கள்
1கப் ராஜ்மா பீன்ஸ்,
3 பெரிய வெங்காயம்,
4 சிறிய தக்காளி,
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
1ஸ்பூன் மல்லி தூள்,
அரை அல்லது 1 ஸ்பூன் மிளகாய் தூள், காரத்திற்கு,
அரை ஸ்பூன் கரம் மசாலா,
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,
1ஸ்பூன் கஸ்தூரி மெதி,
சிறிதளவு மல்லிதழை,
தேவையானஅளவு உப்பு,
தேவையான அளவு வெங்காயம் ,
பொரிக்க எண்ணெய் - 3டேபிள் ஸ்பூன் எண்ணெய் .
செய்முறை :
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ராஜ்மா பீன்ஸ் ஐ 8மணி நேரம் ஊற வைத்து,2தம்ளர் தண்ணீர் ஊற்றி 8விசில் விட்டு வேகவைக்கவும்.இந்த கிரேவி நன்கு 'திக்'-க்காக இருக்கும்.இதில் சேர்க்கும் அளவுகளுக்கு 1-2 கப் அளவில் ராஜ்மாபீன்ஸ் சேர்க்கலாம். நான் 1கப் எடுத்துள்ளேன்.வெங்காயத்தை மெல்லியதாக அரிந்து,தேவையான அளவு எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும். 3 பகுதிகளாக பொரித்துக் கொள்ளலாம். தக்காளியை விழுதாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,பின் அரைத்ததக்காளி விழுதுசேர்த்துவதக்கவும்.வதங்கியதும்,மல்லி,மிளகாய்,மஞ்சள்,கரம் மசாலா தூள்மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்..வதங்கியதும்,வேக வைத்த தண்ணீர் மற்றும் ராஜ்மா சேர்த்து,தேவையான அளவு தண்ணீரும்
சேர்த்து 15-20நிமிடங்கள் நன்கு மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.

பச்சை வாசம் போக கொதித்து,தேவையான கிரேவி பதம் வந்ததும் கஸ்தூரி மெத்தி மற்றும்
மல்லித்தழை தூவி மேலும் 2நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அனைத்து பரிமாறவும்.
இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். சுவையான,ராஜ்மா கிரேவி ரெடி
புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரவி சாப்பிட்டால், புரோட்டீன்
மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதுடன் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் வயிறு
நிரம்பும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News