வெஜிடபிள் கிரேவி (Mixed Vegetable Gravy)
தேவையான பொருட்கள்:
காய்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி) - 1 கப் (பொடியாக
நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது அல்லது அரைத்தது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் (தனியா தூள்) - 1.5 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
அரைக்க வேண்டியவை (பேஸ்ட் செய்ய)
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 5 அல்லது சோம்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து
எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர்சேர்த்துகாய்களை நன்றாக வேக வைக்கவும்.காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய்-முந்திரி விழுதை ஊற்றிகொதிக்க விடவும்.
இறுதியாக கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால்,சுவையான வெஜிடபிள் கிரேவி தயார்.பூரி மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.
0
Leave a Reply