ஜில் நீர் மோர்
தேவையான பொருட்கள் - தயிர் 2 கப், உப்பு சிறிதளவு, பச்சை மிளகாய் 1 சிறியது, சின்ன வெங்காயம் 3, இஞ்சி 1 இஞ்ச், கருவேப்பிலை சிறிதளவு, மல்லி இலை சிறிதளவு, பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன், சீரகப் பொடி கால் டீஸ்பூன், ஜீனி 3 டீஸ்பூன், தண்ணீர் 3 கப்,
செய்முறை - தயிரை தவிர்த்து மீதி அனைத்தையும் ,ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பின் தயிர் சேர்த்து நன்றாக அடித்துக் கொண்டு, தண்ணீர் சேர்த்து வடிகட்டி ,பிரிட்ஜில் வைத்து ஜில் ஆனவுடன் எடுத்துக் குடியுங்கள். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.
0
Leave a Reply