25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பூண்டு ஊறுகாய் (garlic pickle )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூண்டு ஊறுகாய் (garlic pickle )

தேவையான பொருட்கள் ;

 1கப்பூண்டு பல், 6 வரமிளகாய்,அரை ஸ்பூன்கடுகு,கால்ஸ்பூன் வெந்தயம்,தேவைக்கு உப்பு, கால்ஸ்பூன் பெருங்காயம்,

கால்ஸ்பூன் மஞ்சள்,

தாளிக்க ;

கால்ஸ்பூன்கடுகு,1 வரமிளகாய்,1 கொத்து கருவேப்பிலை,தேவைக்கேற்ப நல்லெண்ணெய்

செய்முறை -

முதலில் பூண்டு உரித்துக்கொள்ளவும்.பின் கடுகு, வெந்தயம் வறுக்கவும்.அதிலேயே வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.பின் அதிலேயே உப்புசேர்க்கவும். ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.புளியை வென்னீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.பின் வாணலியை அடுப்பில்வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்.அதில் கடுகுபோட்டு பொரிந்ததும்,வரமிளகாய், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.

அரைத்த பொடியைப் போடவும்.பின் மஞ்சள்பொடி சேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.பின் புளிகரைசலை ஊற்றவும்.நன்கு கொதிக்கவிடவும்.பின் அடுப்பை சிம்மில்வைத்து விடவும்.வெல்லத்தூள் அரைஸ்பூன் சேர்க்கவும்.பெருங்காயம் கால்ஸ்பூன்சேர்க்கவும்.

பூண்டு புளி கரைசலோடு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும். அப்போது பூண்டுஊறுகாய் ரெடி.

தயிர் சாதம், சப்பாத்தி, தோசை,இட்லிக்கு அருமையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News