ஆப்பிள் பேன்கேக்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
ஆப்பிள் - 1 (தோல் நீக்கி துருவியது),
நாட்டுச்சர்க்கரை - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்,
முட்டை - 1,
பால் - 3/4 கப் (தேவைக்கேற்ப),
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - சுடுவதற்கு தேவையான அளவு,
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, துருவிய ஆப்பிள், நாட்டுச்சர்க்கரை மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.
அதனுடன் முட்டையை உடைத்து சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பாலை சிறிது சிறிதாக ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.பேனை சூடாக்கி, சிறிதளவு நெய் தடவவும்.
மாவை ஒரு கரண்டி எடுத்து தடிமனாக ஊற்றி, மிதமான தீயில் வேகவிடவும்.
ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கத்தையும் நன்றாகச் சுட்டு எடுக்கவும். மென்மையான, சத்தான ஆப்பிள் பேன்கேக் தயார்.
0
Leave a Reply