வாழைப்பழ பேன் கேக்.
தேவையான பொருட்கள் -
1 கப் மைதா மாவு,
2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை,
2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்,
2 டேபிள்ஸ்பூன் மசித்த வாழைப்பழம்,
1 முட்டை.
செய்முறை -
மைதா மாவு சக்கரை பால் பவுடர் மசித்து வைத்த வாழைப்பழம் மற்றும் முட்டை சேர்த்து நன்கு விஸ்க் வைத்து கலக்கவும்.கேக் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பேட்டர் செய்யவும்.
வெண்ணெய் தடவிய பேனில் ஒரு கரண்டி ஊற்றி மூடி வைத்து, இரண்டு பக்கமும் வேகவைக்கவும். சாக்லேட் சிரப் தேன் மற்றும் பழங்கள் வைத்து பரிமாறவும். சுவையான வாழைப்பழம் பேன் கேக் தயார்.
குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம்.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்.
0
Leave a Reply