எக் பேன் கேக்.
தேவையான பொருட்கள்-
1 அல்லது 2முட்டை,
1 கப்மைதா மாவு,
1வாழைப்பழம்,
2 மேசைக்கரண்டிசர்க்கரை,
ஒரு சிட்டிகை உப்பு,
ஒரு சிட்டிகைசோடா உப்பு,
1/2 ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்,
2 மேசைக்கரண்டி எண்ணெய்.
செய்முறை-
முதலில் மிக்ஸியில் வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.இதில் உப்பு, சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த அடித்த கலவையில் மைதா மாவு சேர்த்து ,கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.இதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் தடவி, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, வேக வைத்து எடுக்கவும். சுவையான எக் பேன் கேக் தயார்.
0
Leave a Reply