ராகி பேன்கேக்.
தேவையான பொருட்கள்-
1 கப் ராகி மாவு,
வெல்லம் தேவையான அளவு ,
1-2வாழைப்பழம்,
1/2டீஸ்பூன் ஏலக்காய்தூள்.
செய்முறை -
முதலில் கடாயில் ராகி மாவினை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து கொள்ளவும். பின்னர் ஆற வைத்து பாத்திரத்தில் போடவும்.
அதனுடன் வாழைப்பழம், வெல்லம் அல்லது பாகு காய்ச்சிய வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, நன்றாக மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இதனுடன் சிறிது பின்ச் சுக்கு பொடி சேர்த்தும் கொள்ளலாம்.
தோசை கல் சூடானவுடன் ,மாவினை ஊற்றி தோசை போல நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வெந்ததும், அடுப்பினை அணைத்து விடவும்.சுவையான ராகி பேன்கேக் தயார்.
0
Leave a Reply