25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


Rosemary   ரோஸ்மேரி இலைகள்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Rosemary ரோஸ்மேரி இலைகள்..

ரோஸ்மேரி இலைகள், அதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்காக சமையல், மருத்துவம் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாகும்.

  1. ரோஸ்மேரி இலைகளில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்றவை, அழற்ச்சி மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 
  2. ரோஸ்மேரி இலைகள் மூளையின் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு பெரிதும் உதவுகிறது. ரோஸ்மேரியின் நறுமணம், மூளையைத் தூண்டி, சிறந்த தெளிவு, கவனம் மற்றும் மனநிலையை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ச்சியாக நம் உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் இழப்பு பிரச்சனைகள் தவிர்க்கப்படுமாம். 
  3. ரோஸ்மேரி இலைகள் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான அசௌகர்யம், வீக்கம் மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது. ரோஸ்மேரி டீ குடிப்பது அல்லது ரோஸ்மேரி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், செரிமான மண்டலம் வலுப்பெற்று, குடல் அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
  4. சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த பண்பு உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க குறைக்க உதவுகிறது. 
  5. நோய்த் தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க செயல்படுகின்றன. எனவே உங்கள் உணவில் ரோஸ்மேரியை சேர்ப்பது மூலமாக, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். 
  6. பாரம்பரிய வைத்திய முறையில் ரோஸ்மேரி இலைகள் சருமம் மற்றும் முடிக்கு ஆரோக்கியம் தர பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆக்சிஜனேற்ற பண்பு, சருமத்தை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ரோஸ்மேரி இலைகளை தலைக்குப் பயன்படுத்தினால், உச்சந்தலைக்கு ஊட்டம் கிடைத்து மயிர்க் கால்கள் வலுப்பெற உதவும். 

 

இதை நாம் உணவுப் பொருளாக எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது என்றாலும், அதை மிதமாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஏற்கனவே உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பேரிலேயே இதை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News