கோடைக்கு இளநீர் OR எலுமிச்சை ஜூஸ் எது பெஸ்ட்?
கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே உடல்நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். இல்லையெனில் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படுத்தலாம்.உடலின் வெப்பநிலையை குறைத்து எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.இளநீர், எலுமிச்சை ஜுஸ் உங்களுக்கு சிறந்த தீர்வு ஆகும். ஏனெனில் இதில் பல வகையான சத்துக்கள் உள்ளன.ஆனால் இவை இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும்.இளநீரில் எலக்ட்டோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவதுடன், இதில் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவையும் அதிகமாக இருக்கின்றது.கோடையில் இதனை குடித்து வந்தால், உடலில் திரவங்களை சமநிலையில் பராமரிப்பதோடு, தசைகள் மற்றும் நரம்பு சமிக்ஞைகளை பராமரிக்கவும் செய்கின்றது.இளநீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குளுக்கோஸ், புருக்டோஸ் போன்ற சர்க்கரைகளும் இருப்பதால், இவை உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன. வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ள நிலையில், இதில் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுத்து, உடல் செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
கோடை காலத்தில் எலுமிச்சை ஜுஸ் குடித்து வந்தால், உடல் நீரேற்றத்துடன் இருப்பதுடன் பல நன்மைகளும் அளிக்கின்றது.இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள் உள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் செய்கின்றது.எலுமிச்சையில் அமிலத்தன்மை இருந்தாலும், காரப் பண்புகளையும் கொண்டுள்ளதால், இந்த ஜூஸை குடிக்கும் போது, உடலின்pH அளவை சமநிலையில் பராமரிக்கப்படுகிறது.இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உற்பத்தி செய்ய அதிகமாக உதவி செய்வதுடன், கோடையில் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்கின்றது.கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டுமே உதவி புரியும். இதில் இளநீர் வியர்வை மூலம் இழந்தஎலக்ட்ரோலைட்டுகளை நிரப்புவதில் சிறந்து விளங்குகிறது. எனவே கடுமையான உடற்பயிற்சிக்கு பின் அல்லது வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும், குடிக்க ஏற்ற சிறந்த பானமாக இளநீர் விளங்கும்..
எலுமிச்சை ஜூஸில் இளநீரைப் போல் எலக்ட்ரோலைட்டுகள் இல்லாவிட்டாலும், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தேவையான சத்துக்கள் உள்ளன. அதுவும் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் எலுமிச்சை ஜூஸானது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, அதிக திரவ உட்கொள்ளலை ஊக்குவித்து, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.எனவே கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டுமே உதவி புரிவதால், எவற்றை தேர்வு செய்வதென்பது ஒருவரது விருப்பத்தைப் பொறுத்தது. உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட பின் அல்லது வெளியே சுற்றிய பின் குடிக்க இளநீர் சிறந்ததாக இருக்கும். அதே வேளையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள நினைத்தால், எலுமிச்சை ஜூஸை குடிப்பது சிறந்ததாக இருக்கும்.
0
Leave a Reply