உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் புவனேஸ்வரில் நடக்கவுள்ளது.!
வரும் 2028ல் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி புவனேஸ்வரில் நடக்கவுள்ளது.உலக உள்ளரங்கு சாம்பியன் ஷிப் தொடர்,சர்வதேசதடகள கூட்டமைப்பு சார்பில், 21வது சீசன் போலந்தில் இன்று துவங்குகிறது.இந்நிலையில் நேற்று போலந்தில், உலக தடகள கவுன்சில் கூட்டம் நடந்தது.இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஓட்டம் உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் இடம் பெற்றுள்ளன. வரும் 2028ல் உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் 22வது சீசனை நடத்திட இந்தியாவுக்கு அனுமதி வழங்கப் பட்டது. இதனையடுத்து இப்போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது.
வரும் மார்ச் 24-25ல் கலிங்கா மைதானத்தில், தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்முதல்சீசன் நடக்கவுள்ளது.உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ் வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கவுள்ளது.
0
Leave a Reply