ஏலத்திற்கு வரும் தங்கக் கழிப்பறை!
கலை உலகில் வித்தியாசமான படைப்புகளுக்குப் பெயர் பெற்ற இத்தாலிய கலைஞர் மவுரிசியோ கட்டெலன், 18 காரட் தங்கத்தால் உருவாக்கிய கழிப்பறை மீண்டும் ஏலத்திற்கு வர உள்ளது.
‘America’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படைப்பு, வெறும் தங்கக் கழிப்பறையாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. செல்வம், அதிகாரம், சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் நுகர்வுக் கலாசாரத்தை நையாண்டி செய்யும் கலைப்படைப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற ஏல நிறுவனமான Sotheby’s மூலம் இது ஏலத்திற்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண பயன்பாட்டுப் பொருளை கோடிக்கணக்கான மதிப்புள்ள கலைப்படைப்பாக மாற்றியிருப்பதே இந்தப் படைப்பின் மிகப்பெரிய தனிச்சிறப்பு.
கழிப்பறைதான்... ஆனால் விலை மட்டும் சாதாரணமாக இருக்காது!
0
Leave a Reply