25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சரஸ்வதி பூஜை,  ஆயுத பூஜை வழிபாடு !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சரஸ்வதி பூஜை,  ஆயுத பூஜை வழிபாடு !

நவராத்திரி நாட்களில் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுவது ஐதிகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சக்தி என்று இந்து பாரம்பரியத்தில் குறிப்பிடப்படும் அம்பிகைக்கு உரிய ஒன்பது நாட்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி.

ஆயுத பூஜை பூஜை முறையின் உள்ளர்த்தம்என்னவென்றால் சக்தியின் அம்சத்தை மூன்று விதமாக ஆன்மீகரீதியில் ஒரு தொழிலையும் நடத்துவதற்கு முதலில் அந்த தொழில் குறித்த நடைமுறை அறிவு. அதற்கு அடுத்ததாக அந்த தொழிலை நடத்துவதற்கு உரிய மூலதனம்,. அதற்கு அடுத்ததாக தொடர்ந்து அந்த தொழிலை திறமையாக நடத்திச் செல்வதற்கு உரிய ஆற்றல் அவசியம்.

மூன்று விஷயங்களையும் அடிப்படையாக கொண்டுதான் சரஸ்வதி பூஜை என்ற ஆயுத பூஜைஅனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அந்த ஒன்பதாம் நாளன்று சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுவது மூலமாக குழந்தைகளின்கல்வி மற்றும் தொழில்நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவை சிறப்பாக இருக்கும்என்பது நம்பிக்கையாகும்.  கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நாம் செய்யும் தொழிலுக்கு துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளாகும்.

சரஸ்வதியின் படத்தின் முன்னே குழந்தைகளின் புத்தகங்களை அடுக்கி வைப்பர். அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், பொரிகடலை,  பொரி,அவல், நாட்டு சர்க்கரை, பழங்கள் போன்றவற்றை பிரசாதமாக படைத்து வழிபடுவர். பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர்கள் சரஸ்வதி தேவியின் துதிகளை பாடி நல்ல கல்வி அறிவு பெறுவதற்காக பிரார்த்தனை செய்துகொள்வார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News