வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்து பயிற்சி வகுப்பு.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (நிலை 1, நிலை 2, நிலை 3)) , 157-நுண் பார்வையாளர்கள் மற்றும் 1,010 வாக்குச்சாவடி அமைவிடங்களில் பணிபுரியவுள்ள 1,073 காவல் துறை அலுவலர்களை இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (21.04.2026) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(இராஜபாளையம், மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு.அரவிந்த் மீனா,I A S., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு.ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு.சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா,I A S ., அவர்கள்(திருச்சுழி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மரு.ந.ஸ்ரீநாதா,இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 2001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (நிலை 1, நிலை 2, நிலை 3)), 157-நுண் பார்வையாளர்கள் மற்றும் 1,010 வாக்குச்சாவடி அமைவிடங்களில் பணிபுரியவுள்ள 1,073 காவலர்கள் தேர்தல் பணிகளில் அமர்த்தப்பட உள்ளனர்.
அதனடிப்படையில், இன்றைய தினம் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பணிபுரியவுள்ள காவல் துறை அலுவலர்களை இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply