மலையாள குணச்சித்திர நடிகர் சலீம் குமார் காலமானார்.
பிரபல மலையாள நடிகர் சலீம் குமார், தமிழில் 'தென்காசிப் பட்டணம்', 'ராஜமாணிக்கம்', 'நெடுஞ்சாலை', 'மரியான்' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகக் கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக்குறைவால் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 56 வயதான சலீம் குமார், தனது 30 ஆண்டுக்காலத் திரை வாழ்க்கையில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்குத் திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
0
Leave a Reply