25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


.உலோகத்தையே பயன்படுத்தாமல் ஒரு மின்சார மோட்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.உலோகத்தையே பயன்படுத்தாமல் ஒரு மின்சார மோட்டார்.

உ லோகத்தையேபயன்படுத்தாமல்ஒருமின்சாரமோட்டாரைஉருவாக்கிசாதனை படைத்துள்ளனர்தென்கொரியாவின், கே.ஐ.எஸ்.டி., நிலைய விஞ்ஞானிகள்.மோட்டார் காயிலுக்கு, கனமான தாமிரம் அல்லது அலுமினிய கம்பிச் சுருள்களுக்குப் பதிலாக, கார்பன் நானோகுழாய்களை (Carbon Nanotubes) கொண்டு உருவாக்கப்பட்ட கம்பிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்திஉள் ளனர்.இவை மிகவும் இலகு வானவை. உறுதியானவை. அதோடு வளையும் தன்மை கொண்டவை. 

இந்த நானோகுழாய் கம்பிகள், தாமிரக் கம்பிகளைவிட 80 சதவீதம் வரை எடை குறைந்தவை. குறைவான எடை இருப்பது, மின்சார வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் போன்ற வற்றுக்கு மிகப்பெரிய வரப்பிர சாதம்தான். உதாரணமாக, ஒரு விமானத்தில், கொரிய விஞ்ஞானி கள் உருவாக்கிய மோட்டார்களை பயன்படுத்தினால் பல நூறு கிலோ எடையை குறைக்க முடியும்.

தற்போதைக்கு கார்பன் நானோ குழாய் காயில்களின், மின் கடத்தும் திறன் தாமிரத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. எனினும், எடை குறைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவை, இதை ஒரு சிறந்த மாற்றாக முன்னிறுத்துகின்றன.உலோக காயில் இல்லாத மோட்டார்கள், இலகுரக மின்சார வாகனங்களுக்கு விரைவில் வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *