அமைச்சர் அவர்கள், சிவகாசி சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் 25 சிறப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு ரூ.2.21 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் (09.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், 20 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு தலா ரூ.6000/- மதிப்பில் காதொலி கருவிகளையும், 4 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு தலா ரூ.6500/- மதிப்பில் சக்கர நாற்காலிகளையும், 1 மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.65,000/- மதிப்பில் மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியையும் என மொத்தம் 25 சிறப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு ரூ.2.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், அவர்களுக்கு கல்வி, பயிற்சி, பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்து வருகிறது. அந்த வகையில், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வின்போது, பள்ளியில் செவித்திறன் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகளுடன் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கற்பித்தல் முறைகள், தனித்திறன் வளர்ப்புப் பயிற்சிகள், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் வழங்கப்படும் பயிற்சிகள், பள்ளியின் வகுப்பறைகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட தேவைகள் குறித்து கேட்டறிப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வியுடன் இணைந்து தன்னம்பிக்கை, சுயசார்பு மற்றும் சமூகத்தில் சம வாய்ப்புடன் வாழ்வதற்குத் தேவையான திறன்களை வளர்ப்பது மிகவும் முக்கியமானது. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து அதற்கேற்ற பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களை தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் முன்னேறச் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதம் - 2026 முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் பார்வையிட்டார்.இந்த நிகழ்வின் போது, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ஷீலா, அரசுத்துறை துறை அலுவலர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply