25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ராஜபாளையத்தில் விவசாயிகள் பெயரில் ,செங்கல் சூளைகளுக்கு விதி முறையை மீறி ,அதிக ஆழத்தில் வண்டல் மணல் கொள்ளை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் விவசாயிகள் பெயரில் ,செங்கல் சூளைகளுக்கு விதி முறையை மீறி ,அதிக ஆழத்தில் வண்டல் மணல் கொள்ளை

மாநிலம் முழுவதும் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கண்மாயிகளில் மண் அள்ளுவதற்கு தாசில்தார் அளவில் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகல் தெரிவித்தது. இதை அடுத்து அரசியல் வாதிகளின் மேற்பார்வையின் கீழ் சம்பந்தப்பட்ட கண்மாயிகளில் விவசாயிகளை தவிர செங்கல் சூளை வியாபாரிகள், ரியல்எஸ்டேட் அதிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன்படி அனுமதிக்கப்பட்ட கடவுச் சீட்டுகளை படி எடுத்து வைத்து 3 அடிக்கு பதில் அதிக ஆழம் கண்மாய்களில் மண் தோண்டப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் பெயரில் சூளைகளுக்கும், பல்வேறு வணிக பயன்பாட்டிற்கும் மண் அள்ளி கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிக வருவாய் என்பதுடன் நடவடிக்கை என்பது கானல் நீர் ஆகி வருகிறது.அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? என விவசாய  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News