வெள்ளை முள்ளங்கி பச்சடி
தேவையான பொருட்கள் - வெள்ளை முள்ளங்கி 2, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு ஒன்றரை டீஸ்பூன், பல்லாரி வெங்காயம்1, பச்சை மிளகாய் 4, வெல்லம் சிறிது, கடுகு 1டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.
செய்முறை - முதலில் புளியைத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். முள்ளங்கியை நறுக்கி மிருதுவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளியைத் திட்டமாகக் கரைத்துக் கொண்டு உப்பையும், வெல்லத்தையும் போட வேண்டும். அரைத்த விழுதை புளிக்கரைசலில் போட்டு கரைத்து விட வேண்டும். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொண்டு, வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு தாளித்து உடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு சிறிது வதங்கியவுடன், முள்ளங்கி, புளி கரைசலை ஊற்றி வதக்கி இறக்க வேண்டும்.
0
Leave a Reply