திவ்யான்ஷி ஜோடி யூத் டேபிள் டென்னிசில் சாம்பியன் !
சர்வதேச டேபிள் டென்னிஸ் யூத் கன்டெண்டர் தொடர் மான்டெனெக்ரோவில் ,பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, சின்ட்ரல்லா ஜோடி, போர்டோரிகோவின் எட்மையர் லியான், போலந்தின் நடாலியா ஜோடியை சந்தித்தது. தொடர்ந்து 3 செட்டையும்11-4 , 11-5 , 11-4 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு (15 வயதுக்கு உட்பட்ட) பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, ஜப்பானின் இஷிதாவை சந்தித்தார்.. முடிவில் திவ்யான்ஷி 2-3 என்ற செட் கணக்கில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது
0
Leave a Reply