தமிழக வீராங்கனை வைஷாலி கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
'பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி தொடர் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
நேற்று முன்தினம் இரவு நடந்த ஓபன் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், ஸ்பெனின் டேனியல் யூபாவை எதிர்கொண்டு ஆடிய குகேஷ் 35-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி 65-வது நகர்த்தலில் ஆன்டன் டெம்சென்கோவை (சுலோவேனியா) வென்றார். தமிழக வீரர்பிரக்ஞானந்தா 65-வது நகர்த்தலில் போரிஸ் ஜெல்பாண்டை (இஸ்ரேல்) தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றார். விதித் குஜ ராத்தி (இந்தியா)- அலெக்சாண்டர் பிரெட்கே (செர்பியா), கார்த்தி கேயன் முரளி-திவ்யா தேஷ்முக் (இருவரும் இந்தியா) இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி ,பெண்கள் பிரிவின் 3-வது சுற்றில் 38-வது நகர்த்த லில் ஒல்கா படேல்காவை (ஆஸ்திரியா) தோற்கடித்து , வெற்றியை பதிவு செய்தார். அத்துடன் அவர் தனது பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
0
Leave a Reply