இந்தியா ஆசிய ஹாக்கி சாம்பியன் பைனலில் தென் கொரியாவைவென்று பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
ஆசிய கோப்பை ஹாக்கி பீஹாரின் ராஜ்கிர் நகரில் ,நேற்று நடந்த 12வது சீசன் பைனலில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டம் துவங்கிய 31வது வினாடியில் ஒரு கோல் அடித்த சுக்ஜீத் சிங் இந்தியாவுக்கு விரைவாக முன்னிலை பெற்றுத்தந்தார்.இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஆசிய கோப்பை வென்ற இந்தியா, அடுத்த ஆண்டு (ஆக. 14-30) பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
0
Leave a Reply