வெற்றியுடன் துவக்கிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி.
பெண்களுக்கான ஆசிய கோப்பையில் ,ஹாக்கி தொடரை இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 11-0 என, தாய்லாந்தை வீழ்த்தியது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் சீனாவின் ஹாங்சோவ் நகரில், நடக்கிறது.‘நடப்பு சாம்பியன்' ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவில் சீனா, சீனதைபே, மலேசியா, தென் கொரியா, 'பி' பிரிவில் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' லீக் போட்டியில், உலகின் 'நம்பர் -9' இந்தியா, தாய்லாந்து (30வது இடம் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் ,ஆட்டநேர முடிவில் 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
0
Leave a Reply