இந்திய வீராங்கனைகள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அபாரம்.
உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில், 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்10 வீரர், 10 வீராங்கனைகள் என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் சாக்சி சவுத்ரி பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்றில் சீனியர் அரங்கில் களமிறங்கிய உக்ரைனின் விக்டோரியாவை எதிர் கொண்டார். முதல் சுற்றில் சாக்சி முன்னிலை பெற்றார். விக்டோரியா இரண்டாவது சுற்றில் சாக்சியின் குத்துக்களை சமாளிக்க முடியாமல் திணறினார் போட்டியை நிறுத்திய நடுவர்கள், சாக்சி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
0
Leave a Reply