சிவனுக்கு விருப்பமான வில்வம்.
சிவபெருமான் வழிபாட்டிற்குரிய பொருட்களில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை, திரிசூலத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது.இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக வும், வில்வத்தைப் போற்றுகிறார்கள்.மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியபோது, அவ ரது கைகளில் இருந்து வில்வம் தோன்றியதாக புராணங்கள் கூறுகின் றன. மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக வில் வமரம் உள்ளது.
வில்வ மரத்தின் கிளைகள் வேதங்களாகவும், இலைகள் சிவசொரூப மாகவும், வேர்கள் கோடான கோடி ருத்திரர்களாகவும் பாவிக்கப்படுகின்றன. சிவனுக்கு பிரியமான வில் வத்தை கொண்டு, அவரை அர்ச்சிப்பதன் மூலம் அவரது திருவருளை எளிதாகப் பெறலாம். முறைப்படி விரதம் இருந்து வில்வ மரத்தை பூஜிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வ இலையைக்கொண்டு இறைவனை அர்ச்சிப்பது, லட்சம் தங்க மலர் களைக் கொண்டு அர்ச்சிப்பதற்கு சமம் ஆகும்.
துளசி மாடம் போல், வீட்டில் வில்வ மரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதன்படி ஒருவர் தன்னுடைய வீட்டில் வில்வ மரத்தை வளர்ப்பது என்பது, அஸ்வமேத யாகம் செய்த தற்கான பலனைக் கொடுக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக் கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பெரும் பாக்கி யம் ஏற்படும்.
அர்ச்சனை வில்வத்தால் செய்யும் போது, சிவபெருமா னோடு நாம் இன்னும் நெருங்க முடியும், அவரது அருளைப்பெற முடியும். ஏழரைச் சனியின் பிடியில் இருப்பவர்கள், வில்வத்தால் ஈசனை அர்ச்சித்து வழிபடுவது சிறந்தது. இத்தகையை சிறப்புமிக்க வில்வ மரத்தின் இலைகளை, சோமவாரம் (திங்கட்கிழமை), சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மரத்தில் இருந்து பறிக் கக்கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக்கூடாது என்பதும் ஐதீகம்.
0
Leave a Reply