இந்திய வீராங்கனை மனு பாகர் (25 மீ., 'பிஸ்டல்') ஆசிய துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார்.
டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் ('ரைபிள்' / 'பிஸ் டல்") தொடர் டில்லியில், பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங் (589.24 புள்ளி), மனுபாகர் (584.18) முதலிரண்டு இடம் பிடித்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் (578.22) 7வது இடம் பிடித்தார்,
மனு பாகர், ஈஷாசிங், ரிதம் சங்வான் அடங்கிய இந்திய அணி,25 மீ 'பிஸ்டல்' அணிகள் பிரிவில் 1751.64 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது,
நாம்யா கபூர், அஞ்சலிபகவத், பாரிஷா குப்தா அடங்கிய இந்திய அணி ,ஜூனியர் பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' அணிகள் பிரிவில் (1723.39) தஙகம் வென்றது.அஞ்சலி பகவத் தனி நபர் பைனலில் வெண்கலம் வென்றார்.
0
Leave a Reply