செஸ் உலக கோப்பை வென்ற திவ்யாவிற்கு பாராட்டுக்கள்.
பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் ஜார்ஜியாவில்பைனலில் ஹம்பி, திவ்யா என இரண்டு இந்திய வீராங்கனைகளில் திவ்யா, செஸ் உலக கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார். தவிர இருவரும் 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
உலக கோப்பை தொடர் துவங்கும் முன் திவ்யா வலிமையான வீராங்கனை, இவர் வெற்றி பெறுவார் என யாரும் கணிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம், மன உறுதி திவ்யாவிடம் இருந்தது. 12 வயதில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் ஆன போது, பெரிய வீரர் இல்லை. குகேஷிடம் வியத்தகு திறமை உள்ளது.
இதுபோன்று தான் திவ்யா. இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக இல்லை என்றாலும், அபூர்வ திறமை உள்ளது.ஆனந்த் போன்ற ஜாம்பவான்கள், புதிய தலைமுறை நட்சத்திரங்களை வழிநடத்திச் செல்வதால், இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. இந்திய செஸ் நட்சத்திரங்கள் உலக அரங்கில் வெற்றி பவனி வருகின்றனர்.
0
Leave a Reply