21 பதக்கம் வென்ற இந்தியா.
உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் ஜெர்மனியில், 3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டத்தின் பெண்களுக்கான பைனலில் இந்தியா சார்பில் அன்கிதா பங்கேற்றார். பந்தய துாரத்தை 9 நிமிடம், 31.99 வினாடியில் கடந்த அன்கிதா, 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
4×100 மீ., தொடர் ஓட்டத்தின்ஆண்களுக்கான பைனலில் லல்லு பிரசாத் போய், அனிமேஷ், மணிகண்டா, மிருத்யம் ஜெயராம் அடங்கிய இந்திய அணி, இலக்கை 38.99 வினாடியில் கடந்து 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது.
'எஸ்.யு.5' பிரிவு பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் துளசி மதி முருகேசன் 18-21, 21-17, 21-16 என்ற கணக்கில் சகவீராங்கனை மணிஷா ராமதாசை தோற்கடித்து தங்கத்தை வென்றார்.
'எஸ்.எல்.3 எஸ்.எல்.4' பிரிவு ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஜெகதீஷ், நவீன் ஜோடி, நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர்.மற்ற பிரிவு போட்டியில் இந்தியாவின் சுகந்த் கடம், சஞ்சனா குமாரி, உமேஷ் குமார், சூர்யா வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்தியாவுக்கு 3 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கம் கிடைத்தது.
0
Leave a Reply