செஸ் உலககோப்பையை மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த திவ்யா 19 வயது திவ்யா தேஷ்முக் வென்றார்.
உலக செஸ் பைனலில் விளையாடிய கோப்பை இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.இந்திய பெண்களின் திறமையை உணர்த்துகிறது.உலக கோப்பை தொடரில் இந்திய ஜாம்பவான் ஆனந்த்,2000,2002 என இருமுறை சாம்பியன் ஆனார். இவருக்கு அடுத்து உலககோப்பை வென்ற இந்தியர் ஆனார் திவ்யா.செஸ் உலக கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் திவ்யா. பைனலில் சக வீராங்கனை ஹம்பி இரண்டாவது இடம் பெற்றார்.
திவ்யா, மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர். இவரது தந்தை ஜிதேந்திரா தேஷ்முக்,தாய் நம்ரதா இருவருமே டாக்டர்கள். இவர்கள் வசித்த பகுதியில் கூடைப்பந்து, பாட்மின்டன், செஸ் பயிற்சி மையங்கள் இருந்தன.திவ்யாவுக்கு ஐந்து வயதிலேயே செஸ்மீது ஆர்வம் பிறந்தது.பெண்களுக்கான செஸ் தொடரில் உலக வீராங்கனை கோப்பை வென்ற இளம் எனபெருமை பெற்றார் திவ்யா,உலகசாம்பியன்ஷிப்பில் சாதித்த இளம் வீரராக இந்தியாவின் குகேஷ் 19, உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு,பிரதமர் மோடி,செஸ் ஜாம்பவான் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியவீராங்கனையான திவ்யாவுக்கு வாழ்த்துகள்கூறினர்.ஹம்பி கடைசி வரைபோராடினார். இந்தியாவில் பெண்கள் செஸ் போட்டியை கொண்டாடும் தருணம். புதிய சாம்பியன் திவ்யா ரூ.43.33 லட்சம், ஹம்பி ரு. 30.33 லட்சம் பெற்றனர்
0
Leave a Reply