யு.எஸ்., ஓபன் 'சூப்பர் 300’ பாட்மின்டன் .
யு.எஸ்., ஓபன் 'சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யங் மோதினர். மொத்தம் 47 நிமிடம் நீடித்த போட்டியில் ஆயுஷ் 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக 'வேர்ல்டு டூர்' பட்டம் வென்றார்.
20,யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் பட்டம் வென்ற ,இந்திய வீரரானா கர்நாடகாவை சேர்ந்த ஆயுஷ் 2வது இந்திய வீரரானார். நடப்பு சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்தியரானார் ஆயுஷ்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தான்வி சர்மா 16, அமெரிக்காவின் பெய் வென் ஜாங் 34, மோதினர்.முதல் செட்டை 11-21 என இழந்த தான்வி, 2வது செட்டை 21-16 எனக் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ண யிக்கும் 3வது செட்டில் தான்வி, 10-21,. முடிவில் தான்வி 11-21, 21-16, 10-21 என்ற கணக்கில் -தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply