தமிழ்நாடு டி.என்.பி.எல்., லீக் கிரிக்கெட் போட்டி,
நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட் டியில் திண்டுக்கல், நத்தம் என். பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் திருப்பூர், நெல்லை அணிகள் மோதின.திருப்பூர் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நெல்லை அணி களமிறங்கியது. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார் திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. நெல்லை அணி 19.4 ஓவரில் 113 ரன்னுக்கு தோல்வி யடைந்தது.
இரவு போட்டி
திண்டுக்கல், திருச்சி 'நடப்பு சாம்பியன்' அணிகள் மோதின. திண்டுக்கல் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. திருச்சி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த திண்டுக்கல் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்தது.
0
Leave a Reply