யூத் ஒருநாள் கிரிக்கெட் தொடர்,தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
யூத் ஒருநாள் கிரிக்கெட் தொடர்
5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள இளம் இந்திய அணி (19 வயது),. முதல் போட்டி நேற்று பிரைட்டன் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 174 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 24 ஓவரில் 178/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
சேப்பாக்கம் (12 புள்ளி), திருப்பூர் (8), திண்டுக் கல் (8) அணிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்த லீக் போட்டிகளின் முடிவில் , அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு சேலம் புள்ளி), திருச்சி (6 (4), நெல்லை (4), மதுரை (4) அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. -கோவை அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
'பிளே-ஆப்' போட்டிகள், கடைசி கட்ட லீக் சுற்று, இன்று முதல் திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கவுள்ளன. இன்று நடக்கும் லீக் போட்டியில் சேப்பாக்கம் மதுரை, கோவை சேலம் அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில் திருப்பூர் - நெல்லை, திண்டுக்கல்- திருச்சி அணிகள் விளையாடுகின்றன.
புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று-1, ஜூலை 1ல் நடக்கிறது. மூன்றாவது, 4வது இடம் பிடிக்கும் அணி கள் மோதும் 'எலிமினேட்டர்' போட்டி, ஜூலை 2ல் நடக்கவுள்ளது.ஜூலை 4ல், தகுதிச்சுற்று-2 நடத்தப்படுகிறது. பைனல், ஜூலை 6-ல் நடக்கவுள்ளது.
0
Leave a Reply