விளையாட்டு போட்டிகள். JUNE 29th.
கால்பந்து
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால் பந்து 21வது சீசன்ஆஸ்திரேலியாவில், அடுத்த ஆண்டு(மார்ச் 121). மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான் என 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 8 இடங்களுக்கு தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் 34 அணிகள், 8 பிரிவுகளாக விளையாடுகின்றன.
இந்திய அணி 'பி' பிரிவில் தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான போட்டிகள் தாய்லாந்தில் நடக்கிறது. முதல் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் திமோர்-லெஸ்தே அணியை சந்தித்தது, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது
குத்துசண்டை
'எலைட்' பெண்கள் தொடருக்கான காலிறுதியில் (48-51 கிலோ) ஐதராபாத்தில் தெலுங்கானாவின் நிகாத் ஜரீன் 5-0 என கல்பனாவை வீழ்த்தினார்.
துப்பாக்கி சுடுதல்
10 மீ., 'ஏர் பிஸ்டல்' டேராடூனில் நடக்கும் தேசிய தகுதி போட்டிக்கான ,பைனலில் மனு பாகரை (244,5 புள்ளி) வீழ்த்திய சுருச்சி இந்தர் சிங் (245.6) முதலிடம் பிடித்தார்.
0
Leave a Reply