அடைமாவு ருசியாக அரைக்க.....
ஏலக்காயை பொடிப்பதற்கு முன்பு அடுப்பில் வெறும் வாணலியில் ஏலக்காயை போட்டு வறுத்து எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து பொடித்தால் நன்கு பொடியாகும்.
ஏலக்காய் பொடியை சூப், இனிப்பு வகைகள், களி, அரிசி உணவுகள், பூரி போன்றவற்றில் சேர்க்கலாம். நீங்கள் வீட்டில் தயாரிக்கும் அரிசி புட்டு, ஐஸ் கிரீம், பழக்கூழ், பழ சாலட் போன்றவற்றின் மீது தூவலாம்.
நூடுல்ஸ் செய்யும்போது தண்ணீர் கொதித்ததும் முதலில் மசாலாவை போட்டு அது நன்றாக கரைந்த பிறகு நூடுல்ஸ் சேர்த்தால் மசாலா ஒரே சீராக நூடுல்ஸ் முழுவதும் பரவி இருக்கும்.
கடலைப் பருப்பு வடை செய்வது போல் காராமணி வடையும் செய்யலாம்.அரைகப் காராமணியை அரைமணி நேரம் ஊறவைத்து அதில் ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து அரை ஸ்பூன் சோம்பு, இரண்டு பச்சை மிளகாய், தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, அரைத்து வடை சுட்டு, சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
அடைமாவு அரைக்கும் போது, அரை கப் சிறு பயறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து செய்தால், ருசியாக மட்டுமல்லாமல் சத்தாகவும் இருக்கும்.
0
Leave a Reply