25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


முகப் பொலிவு பெற....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முகப் பொலிவு பெற....

தக்காளிச் சாறுடன் தேன் கலந்து பூசுவது, கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் கலந்த பேக் போடுவது போன்ற இயற்கை வழிகள் சிறந்தவை. 

பீட்ரூட், கேரட் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்வதும், பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதும் சருமத்தை பளிச்சென்று மாற்றும். தினமும் பசும்பால் தடவி கழுவுவது முகம் பொலிவு பெற உதவும். 

காய்ச்சாத பச்சைப் பாலை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்தநீரில் கழுவினால் முகம் மென்மையாகவும் பொலிவாகவும் மாறும்.

தக்காளிச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ, முகம் பிரகாசமாகும்.

கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் கலந்து பேக் போட்டு காய்ந்த பின் கழுவவும்.

வெதுவெதுப்பான பாதாம் எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்து வந்தால், ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவுறும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி வந்தால், முகச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.

வெயிலால் முகம் கருமையடைந்தால், முட்டை வெள்ளைக் கருவை முகத்தில் தடவி வர கருமை மறையும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News