24 APRIL விளையாட்டுபோட்டிகள்
டேபிள் டென்னிஸ்
உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் டுனிசியாவில் நடக்கிறது ஒற்றையர் தகுதிச்சுற்று நடந்தன. பெண்கள் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தியா சிட்டாலே, ருமேனியாவின் எலினா ஜஹாரியாவை சந்தித் தார். முதல் செட்டை 6-11 என இழந்த தியா, அடுத்த செட்டை 11-9 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த கடைசி செட்டை 12-10 என போராடி வென்றார். முடிவில் தியா 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கோல்ப்
ஹரியானாவில் இந்திய கிளாசிக் கோல்ப் சாம்பியன் ஷிப் தொடரில் முதல் இரு சுற்று முடிவில் 67,73 ஸ்டிரோக்குடன் கோல்கட்டாவின் விராஜ் மடப்பா நான்காவது இடத்தில் இருந்தார். நேற்று கடைசி சுற்று போட்டி நடந்தது. இதில் சிறப்பாக செயல் பட்ட விராஜ், 65 ஸ்டிரோக் பெற்றார். இதையடுத்து 205 ஸ்டிரோக்குடன் (67, 73, 65) முதலிடத்துக்கு முன்னேறி கோப்பை வென்றார்.
0
Leave a Reply