5TH MAY விளையாட்டு போட்டிகள் .
கபடி
'நடப்பு சாம்பியன்' ஆண்களுக்கான கபடி லீக் போட்டியில் ஹரியானா, கர்நாடகா அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் 28-14 என முன்னி லையில் இருந்த ஹரியானா, ஆட்ட நேர முடிவில் 57-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்களுக்கான லீக் போட்kடியில் 'நடப்பு சாம்பியன்' ஹரியானா அணி 33-32 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
ஹாக்கி
இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியா சென்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று. முதல் மூன்று போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி யிடம் தோல்வியடைந்த இந்தியா, 4வது போட்டியில் சீனியர் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.
நேற்று, பெர்த்தில் நடந்த கடைசி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்தார்.. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.
0
Leave a Reply