ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டியன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த உடைந்தநிலையில் சமணர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளது.
மகாவீரரின் 2624வதுபிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு,மகாவீர் ஜெயந்தி மார்ச் 31ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களின் 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரின் பிறப்பை குறிப்பதுடன் அகிம்சை,சத்தியம், கருணை ஆகிய அடிப்படை கோட்பாடுகளை வலியுறுத்துகிறது.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் கந்தசாமி ,தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, திருச்சுழி, அருப்புக்கோட்டையில் சமணம் செழித்திருந்ததற்கான ஆவணங்கள் கிடைத்தாலும், ராஜபாளையம் அடுத்த சேத்துாரில் சமணர் சிற்பமும், புத்தூரில் சமண முனிவர்களின் கற்படுகைகளும், மீனாட்சிபுரம் குகை களும் சமண முனிவர்கள் அதிகமாக இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதை பிர திபலிக்கின்றது.
இத்தகைய வரலாற்று இடங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பள்ளி, கல்லுாரி மாணவர்களை அழைத்துச் சென்று நமது பாரம்பரியத்தின் முக்கியத்துவம் உணர்த்த வேண்டும் என்றார்.
0
Leave a Reply