ஒரு CLEANING டிப்ஸ்!
சில நேரம் வெள்ளை துணியில் அழுக்கு அதிகமாக இருக்கும் எவ்வளவு சோப்பு போட்டாலும் போகாது இது ஈஸியாக அழுக்கு போக நன்றாக சுடு தண்ணீரை ஊற்றி அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து கொஞ்சம் வினிகரையும் ஊற்றி ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து சோப்பு போட்டு துவைத்தால் ஈஸியாக அழுக்கு போய் துணி வெள்ளையாக பளிச்சென மின்னும் பழுப்பு நிறமும் போய்விடும் இதை வெள்ளை துணிக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
கிட்சன், பாத்ரூம் பளபளக்க...வீட்டில் உள்ள சிங்க் குழாய்கள், பாத்ரூம் குழாய்களில் எலுமிச்சை சாற்றை தடவி ஊற வைத்து தேய்த்தால் எளிதில் அழுக்குகள் நீங்கி குழாய்கள் பளபளக்கும்.
1 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யில், அரை மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின் அதை பருத்தி துணி கொண்டு பர்னிச்சர்களை துடையுங்கள். இது படிந்திருக்கும் கறைகளை நீக்கி கரையான் தொல்லைகள் இல்லாமல் பராமரிக்கும்.
0
Leave a Reply