25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
அரசு பஸ்களில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின்செண்பகத் தோப்பில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அதன் ஓவியங்கள்வரையப்பட்டுள்ளது >> இந்திய சமத்துவ நாயகன் R.சங்கர் கணேஷ் 21-ம் ஆண்டு தொடர் சேவையாளர். >> ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை. >> ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி இயற்கை கழகம் இணைந்து விழிப்புணர்வு கலை பயணம் துவக்க விழா. >> செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >>


அதிக வெப்பநிலை காரணமாக உடலில் தோன்றும் வேர்வையால் வேர்க்குரு ஏற்படுகிறது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிக வெப்பநிலை காரணமாக உடலில் தோன்றும் வேர்வையால் வேர்க்குரு ஏற்படுகிறது

 ஏப்ரல் மாதத்திலேயே வெப்பம் உச்சத்ததில் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். வெயிலில் நீண்ட நேரம் தங்குவதால் உடல் உஷ்ணம் வேர்க்குரு பிரச்சனை அதிகரிக்கிறது. சிறிய சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படுகிறது. பல நேரங்களில் ஆடை அணிவதில் கூட சிரமம் ஏற்படுகிறது..

வேர்க்குரு போக்கமுல்தானி மெட்டியை பயன்படுத்தி உஷ்ண தடிப்புகளை நீக்கலாம். முல்தானி மெட்டி குளிர்ச்சியாக இருக்கும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத் தழும்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம். முல்தானி மெட்டியில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின் வேர்க்குரு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். வேர்க்குரு இருக்கும் பகுதிகளில் இந்த பேஸ்ட்டை 15 நிமிங்கள் உடலில் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வேர்க்குருவை தடுக்க கோடையில் முடிந்தவரை காட்டன் துணியை மட்டுமே அணியுங்கள். இது வியர்வை உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளதால் உங்கள் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கிறது.

வேர்க்குருவை தடுக்க முடிந்தவரை உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். உடலை ஈரப்பதமூட்டும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். எலுமிச்சை நீர், பழ வகை சார்ந்த ஜூஸ் மற்றும் சர்பத் போன்ற பானங்களின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக உடலில் இருந்து நச்சு பொருட்கள் எளிதில் அகற்றப்படுகின்றன.

வெயிலில் இருந்து வெளியே வரும்போதெல்லாம் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்கவும். இதனால் உடலில் தேங்கியிருக்கும் வியர்வை நீங்கும் தொற்று மற்றும் வேர்க்குரு ஆபத்து இருக்காது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News