முன்னாள் படைவீரர்கள் ,அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.08.2025 அன்று நடைபெறவுள்ளது .
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.08.2025 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள்/ அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினர் மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களின் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply