அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆதார் எண் விரல் பதிவு செய்யலாம்.
மாவட்டத்தில் மத்திய அரசு திட்ட பயனாளிகளின் விவரங்களை ரேஷன் கார்டுடன் ஆதார் எண்விரல் ரேகை பதிவு செய்வது 83 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விடுபட்ட வர்கள் ஏப். 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலை யில் தமிழகத்தில் எந்த ரேஷன் கடையிலும் விரல் ரேகை பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில் முன்னுரிமை குடும்ப அட்டை (பி.எச்.எச்) அந்தி யோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்) அட்டைகளுக்கு குடும்ப அதிக பட்சமாக 35 கிலோ வரைஇலவச அரிசியும், மானிய விலையில் பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பலர் முறைகேடாக பெறுவதால் அரிசி வீணாவதாக கருதிய மத்திய அரசு குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவுகளை மார்ச் 31 வரை காலக்கெடு விதித்து கட்டாயம் ஆக்கியது
மாவட் டத்தில் 7,43,724 முன்னு ரிமை ரேஷன் கார்டுகளில் 6,13,684 கார்டுகளிலும் அந்தியோதயா கார்டு களில் 1,37,066 என ஒட்டு மொத்தமாக 83 சதவீதம்விரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்துஅதிகாரிகள் தெரிவித்ததாவது: விடுபட்ட கார்டுதாரர்களில் இறந்த உறுப்பினர்களை இறப்புச் சான்றிதழ் இன்றி பெயர்களை நீக்க அதிகாரம் இல்லை. இதற்கு தீர்வாக அந்தந்த ரேஷன் கடை ஊழியர் களின் அறிக்கை கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒப்புதல் வழங்க அனுமதி கேட்டுள்ளோம்.வெளியூர்களில் தங்கி படிப்பவர்கள், பணிபுரிப வர்கள் ஏப்.15க்குள் அருகி லுள்ள ரேஷன் கடைகளில் சென்று ஆதார் அட்டைகள் மூலம் விரல் ரேகையை பதிவு செய்யலாம்.
0
Leave a Reply