பிரபல நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் அப்பாவின் நினைவாக மருத்துவமனை ஒன்றை புதியதாக திறந்திருக்கிறார்.
பழம் பெரும் நடிகரான ஜெய்சங்கர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய திரைப்படங்களை தாண்டியும் ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய உதவும் குணத்தால் அதிகமாக பரீட்சையமானவர்தான். தான் வாழும் போதே பலருக்கும் உதவிகளை செய்து கொண்டிருந்தார். அதோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானே செலவு செய்து பல பிரபலங்கள் கூட்டிக்கொண்டு சென்று அவர்களை உதவ வைத்திருக்கிறார். அதுபோல நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.. ஜெய்சங்கரின் மூத்த மகனான விஜய் சங்கர் அப்பா ஆசை பட்ட படியே கண் மருத்துவராக ஆகி இருக்கிறார். அத்தோடு தன்னுடைய தந்தை சொன்னபடியே பல கஷ்டப்பட்டவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாராம். தன்னுடைய தந்தை நினைவு நாளில் ஏழைகள், சினிமா துறையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் என பலருக்கும் தொடர்ச்சியாகஉதவிசெய்துகொண்டிருக்கிறாராம்.
25 வருட அனுபவத்தில் இதுவரைக்கும் இலவசமாக பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண் ஆபரேஷன் செய்து முடித்திருக்கிறேன் என்று சமீபத்தில் அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சங்கர் பற்றி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் டாக்டர் விஜய் சங்கரின் புதிய கிளினிக் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பயணத்தில் இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் பெரும் வெற்றியையும், செழிப்பையும் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.. அதோடு நேரில் சென்று விஜய் சங்கரை ஆசிர்வாதமும் வழங்கி இருக்கிறார்.இதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தொடர்ச்சியாக நீங்களும் உங்கள் அப்பாவை போல பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று விஜய் சங்கருக்கு ஆசிர்வாதங்களை வழங்கி வருகின்றனர்.
0
Leave a Reply