25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வசிக்கும்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்,  சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத்(CM-ARISE)  திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய  வங்கிக் கடன் பெற  விண்ணபிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத்(CM-ARISE) திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணபிக்கலாம்

திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை  சார்ந்தவர்கள் தொழில் முனைவோராக ஆக வாய்ப்பு.

   விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE)  திட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

1.  லோடு ஆட்டோ, 2. கார் 3. பயணிகள் ஆட்டோ, 4. ஜெராக்ஸ் கடை, 5. சென்ட்ரிங்,  6. வெல்டிங், 7. டிபார்மென்ட் ஸ்டோர், 8. கார்மெண்ட்ஸ், 9. அரிசி கடை, 10.ஆவின் பாலகம், 11. எலக்ரிகல்ஸ்,12. பிரவுசிங் சென்டர்,13. பியுட்டி பார்லர் மற்றும் பிற தொழில்கள்.

திட்ட  மதிப்புத் தொகையில் 3.5% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய  வங்கிக்கடனுடன் வழங்கப்படும்.  

இத்திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% சதவீத வட்டி மானியம்  வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் (https//newscheme.tahdco.com) தொழில் முனைவோர்களாக திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வசிக்கும்  விருப்பமுள்ளவர்கள்  விண்ணப்பம்  செய்து பயன் பெறலாம்.

மேலும்  விபரங்களுக்கு  தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி  விவரம்  பெற்று  உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News