25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “பருத்தி திருவிழா “ என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “பருத்தி திருவிழா “ என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை  சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் (25.01.2025) “பருத்தி திருவிழா “ என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் பார்வையிட்டார்.

மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள், விதைகள் நவீன விவசாய கருவிகள் உள்ளிட்டவை குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் வட்டார அளவில் ஒவ்வொரு தலைப்பிலும் நடைபெற்று வருகிறது.அதன்படி, இன்று அருப்புக்கோட்டையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் பருத்தி திருவிழா என்ற தலைப்பில் நடைபெறுகிறது.இவ்வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பயனடைந்திடும் வகையில் வேளாண் தொழில் நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில் நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. வேளாண் ஆராய்ச்சி நிலைங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின்  வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில் நுட்பங்கள், இடுபொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் நெல், சிறுதானியங்கள், மா, பருத்தி, மிளகாய், மக்காச்சோளம், வேளாண் இயந்திரங்கள் பயன்பாடுகள், காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை பயிர்கள் தொடர்பாக அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள் மற்றும் செயல் விளக்கங்களும் வழங்கப்படுகிறது.மேலும், அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் பயிர் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.விவசாயிகள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையிலும், புதிய நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடனும், சந்தை மதிப்புள்ள வேளாண் பொருட்களை விளைவிப்பதின் மூலமும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News