ஜாம்நகரில் இருந்து துவாரகா வரை 'பாத யாத்திரை' மேற்கொண்ட ,அனந்த் அம்பானி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அனந்த் அம்பானி, தனது பிறந்தநாளை துவாரகாவில் துவாரகாதீஷரை தரிசனம் செய்து கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.30வது பிறந்தநாளுக்கு முன்னதாக துவாரகாவிற்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார் 140 கி.மீ பயணம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது, துவாரகாவை அடைய அவருக்கு 2 -4 நாட்கள் ஆகலாம்.
செய்தியாளர்களிடம் பேசிய திரு. அம்பானி,“ஜாம்நகரில் உள்ள எங்கள் வீட்டிலிருந்து, துவாரகா வரை பாதயாத்திரை. இது கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகிறது, இன்னும் இரண்டு அல்லது நான்கு நாட்களில் நாங்கள் துவாரகாவை அடைவோம். எனது பாதயாத்திரை தொடர்கிறது. துவாரகாதீஷ் நம்மை ஆசீர்வதிப்பாராக. எந்த வேலையையும் செய்வதற்கு முன்பு துவாரகாதீஷ் மீது நம்பிக்கை வைத்து, துவாரகாதீஷை நினைவில் கொள்ளுமாறு இளைஞர்களிடம் நான் கூற விரும்புகிறேன். அந்த வேலை நிச்சயமாக எந்த தடையும் இல்லாமல் முடிக்கப்படும், மேலும் கடவுள் இருக்கும்போது,கவலைப்பட ஒன்றுமில்லை.”திரு. அம்பானி தனது பயணத்தைத் ஜாம்நகரின் மோதி காவ்டியிலிருந்து தொடங்கினார், இது ஒவ்வொரு இரவும்10,12 கி.மீ தூரத்தை தனதுZ+ பாதுகாப்பு மற்றும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பின் கீழ் கடக்கிறது. அவர் தனது30வது பிறந்தநாளை ஏப்ரல்10 ஆம் தேதி துவாரகாதீஷ் கோவிலில் பிரார்த்தனைகள் மற்றும் காணிக்கைகளுடன் கொண்டாடுவார்.
0
Leave a Reply